Wednesday, September 9, 2015

விதையில் இருந்து விருட்ச்சமானாய்

கன நேரத்திற்குள்ளே
கால்களுக்கு கீழே
கானல் நீராய்
கரைகின்ற காலம்

எத்தனை போராட்டங்கள்
எத்தனை விழுப்புண்கள்
எண்ணில்லா புகழ்சிகள்,  இகழ்சிகள்
எதுவுமே நிலையில்லை

நீ அடைந்ததெலாம் கை விட்டு நழுவும்
உன் பயணம் மீண்டும் தொடங்கும்
உன்னுடையது எல்லாம் - ஒரு நொடியில்
அதுவுடையதகும்

விதையில் இருந்து விருட்ச்சமானாய்
ஓரிரவில் மறைந்து போவாய்


சுற்றம் புரிதலும், சூழல் பழகுதலும்
நிஜம்போல் இருக்கும் - உண்மை
வெளிச்சத்தில்,  நிழல் மறைய
உன்னிலை தடுமாறும்

விதையில் இருந்து விருட்ச்சமானாய்
ஓரிரவில் மறைந்து போவாய்

விடியலில் நனைந்த சூரியனும்
மடியலுக்கு பயணம்
நட்பும் நட்பும், பகையும் சற்றே
முரண்பாடாய் நெருடும்

பல வருடம் காணாத நட்பும்
சில நரம்புகளை வருடி மறையும்
நடப்பது நிஜமென்றானபின்
எல்லமே நிழல்போல் கரைந்துவிடும்

விதையில் இருந்து விருட்ச்சமானாய்
ஓரிரவில் மறைந்து போவாய் 

No comments:

Post a Comment