Tuesday, September 8, 2015

நான் நலமாக இருக்கிறேன்

திரும்பவும் சொல்கிறேன்
திக்கில்லாமல் செல்கிறேன்

அழகான புன்னகை இல்லை
அனைவரும் திரும்பிப்பார்க்க
அடிக்க வைக்கும் அழகும் இல்லை
அனைவரும் விரும்பி போற்ற

என்சூழல் கதையில்
எல்லாரும் போல்
அழகான, வீரமான
வெற்றிக்கதா நாயகனாக ஆசை - ஆனால்

நான் நானாக இருக்கிறேன்
நலமாக!

என் எண்ணங்கள் இருக்கின்றன
நலமாக!!

என் செய்கைகள் இருக்கின்றன
நலமாக !!!

விளையாட்டு வீரனாக வேண்டாம்
மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு
மேடை ஏறி போராட வேண்டாம்
மற்றவர்களின் இகழ்ச்சிக்கு

என் தருணம் என்னுடன்
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க

நான் நானாக இருக்கிறேன்
நலமாக!

நடந்து வந்த பாதையில்
கடந்து வந்த கனவுகளில்
நிழலாய் தொடர்ந்தது
என் ஞானம்தான்

வாழ்ந்த காலங்கள் இறந்தாலும்
வாழும் வாழ்கை நிகழ்வதால்

நான் நானாக இருக்கிறேன்
நலமாக

No comments:

Post a Comment