மழை பார்த்து வியந்தேன்
என் மீது விழுந்தபோது
என் கரம் மேல்
என்அருகாமைல்
மழை பார்த்து வியந்தேன்
காற்றை பார்த்து வியந்தேன்
உன் உடைகளின் உள்
ஊடுருவிப் பாயும் பொழுது
உன் நிழலைவிட
என் அருகாமையில்
நல்லதே நடக்கும் என நினைதேன்
நன்மையே நிலைக்கும் என் நினைத்தேன்
இவ்வுலகம் உனக்கும்
இவ்வுலகம் எனக்கும் - நன்மையே
நீ என்னைவிட்டு பிரியும் பொழுது
நான் உன்னிடம் சொன்னது
மறப்பதிருக்கு ஒன்றுமில்லை
மன்னிபதற்கு ஒன்றுமில்லை
நீ திரும்பிவருவாய் என்றும்
நானின்றி நீயில்லை என்றும்
தெரிந்தும் புரிந்தும் கொள்வாய்
என நினைத்தேன் - ஆனால்
என்னால் தாங்கமுடியவில்லை - நீ
நானின்றி மகிழ்ச்சியாய் இருக்கிறாய்
நான் கீழுலகில்; நீ மேலுலகில்
இரவை பார்த்து வியந்தேன்
இறப்பை பார்த்து வியந்தேன்
நீயில்லாமல் கழிந்த நாட்கள்
யாருடன் நீ இருந்தாயோ?
காதல் பார்த்து வியந்தேன்
அன்பை பார்த்து வியந்தேன்
இங்கிருந்த காதல்
என்னுடன் இருந்த அன்பு
நம்முள் இருந்த புரிதல்
சென்றுவிட்டது பிறருக்காக
இறப்பை பார்த்து கோபித்தேன்
நல்லதே நடக்கும் என நினைதேன்
நன்மையே நிலைக்கும் என் நினைத்தேன்
நானின்றி நீயில்லை என்று
தெரிந்தும் புரிந்தும் கொண்டிருப்பாய்
என நினைத்தேன் - தவறு
என்னால் தாங்கமுடியவில்லை - நீ
நானின்றி மகிழ்ச்சியாய் இருக்கிறாய்!
நான் கீழுலகில்; நீ மேலுலகில்
நான் புதைமண்ணில்
என் கைவிட்டு நீ நழுவுகிறாய்
நான் என் தினத்திற்கு
காத்திருக்கிறேன்
என் சிரிப்பின் மறைவில்
தெரியாத அழுகைகள்
நல்லதே நடக்கும் என நினைதேன்
நன்மையே நிலைக்கும் என் நினைத்தேன்
நன்மையே நிலைக்கும் என் நினைத்தேன்

No comments:
Post a Comment